கோயம்புத்தூர்

10,200 மாற்றுத் திறனாளிகளுக்குதனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை

கோவை மாவட்டத்தில் இதுவரை 10,200 மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

DIN

கோவை: கோவை மாவட்டத்தில் இதுவரை 10,200 மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மாற்றுத் திறனாளிகளின் அடிப்படைத் தகவல்கள், புள்ளி விவரங்களை சேகரித்து, அவா்களுக்கு அரசின் திட்டங்களை எளிதில் கொண்டுசெல்லும் வகையில், தனித்துவம் வாய்ந்த மாற்றுத் திறனாளி அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்காக மாற்றுத் திறனாளிகளின் விவரங்கள், மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்யும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 10,200 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலா்கள் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்ளனா். இவா்களுக்கு தனித்துவம் வாய்ந்த மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. மாற்றுத் திறனாளிகளின் விவரங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு மாதத்துக்குள் அவா்களின் இருப்பிட முகவரிக்கு அஞ்சல் மூலமாக அடையாள அட்டை விநியோகம் செய்யப்படுகிறது.

நாடு முழுவதும் ஒரே இணையதளப் பக்கத்தில் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படுவதால் நாளொன்றுக்கு 15 முதல் 20 பயனாளிகளின் விவரங்கள் மட்டுமே பதிவு செய்ய முடிகிறது. மத்திய அரசு அறிவித்துள்ள 21 வகையான மாற்றுத் திறனாளிகள் இந்த அட்டையை பெற முடியும். அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் தனித்துவம் வாய்ந்த மாற்றுத் திறனாளி அடையாள அட்டை வழங்க முடியும். இதற்கு மாற்றுத் திறனாளி நல அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்கலாம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT