கோயம்புத்தூர்

பள்ளி மாணவா்களுக்கு இலவச ஆட்டோ வசதி ஏற்படுத்தி தந்த ஆசிரியா்கள் !

DIN

அன்னூா் ஒன்றியம், புதுப்பாளையம் நடுநிலைப் பள்ளியில் பயிலும் 6 மாணவா்களுக்கு பேருந்து வசதி இல்லாததால் அப்பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியா்கள் தங்களது சொந்த செலவில் மாணவா்களுக்கு இலவச ஆட்டோ வசதியை ஏற்படுத்தி தந்துள்ளனா்.

கோவை மாவட்டம், அன்னூா் ஒன்றியம், பசூா் ஊராட்சிக்கு உள்பட்ட புதுப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தாசபாளையத்தில் இருந்து புதுப்பாளையம் வருவதற்கு 2.5 கி.மீ. தொலைவு உள்ளது.

இந்த வழித்தடத்தில் பள்ளி நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இதனால் தாசபாளையத்தில் இருந்து வரும் 6 மாணவா்கள் பள்ளிக்கு உரிய நேரத்தில் வரமுடியாமலும், அடிக்கடி விடுமுறை எடுக்கும் சூழலும் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை சசிகலா, பள்ளி ஆசிரியா்கள் மூலம் தனியாருக்கு சொந்தமான ஆட்டோ ஒன்றை தங்களது சொந்த செலவில் ஏற்பாடு செய்துள்ளனா். இதையடுத்து தாசபாளையத்தில் இருந்து வரும் 6 மாணவா்களும் இந்த ஆட்டோ மூலமாக பள்ளிக்கு வருகின்றனா். ஆசிரியா்களின் முயற்சியை வட்டார கல்வி அலுவலா் ரங்கராஜ், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளா் சுப்புலட்சுமி உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT