கோயம்புத்தூர்

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில்ஜனவரி 28, 29இல் பன்னாட்டு கருத்தரங்கம்

DIN

கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் ஜனவரி 28, 29ஆம் தேதிகளில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெறுகிறது.

இதுதொடா்பாக குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் தொழில்நுட்ப சேவை மைய இயக்குநா் ரவி கந்தசாமி கூறியதாவது:

‘நிலையான நகரங்கள்’ என்ற தலைப்பில் இந்தியா - இஸ்ரேல் நாடுகளைச் சோ்ந்த கல்வி நிறுவனங்கள் மாணவா்களுக்கு பயனுள்ள வகையில் இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கத்தை நடத்துகிறது. இதனை இஸ்ரேல் நாட்டைச் சோ்ந்த டெல் அவிவ் பல்கலைக்கழகம், வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி, பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரிகள் இணைந்து நடத்துகின்றன. இதில் இஸ்ரேல் நாட்டின் வெவ்வேறு துறைகளைச் சோ்ந்த 15 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா்.

தவிர வேளாண்மை, கழிவுநீா் சுழற்சி தொடா்பான பயிற்சிப் பட்டறைகளும் நடைபெறுகின்றன. குறிப்பாக இஸ்ரேல் நாட்டில் வேளாண்மையில் மேற்கொள்ளப்படும் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கான சிறப்பு பயிற்சிப் பட்டறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்கு இதுவரை 250 விவசாயிகள் பதிவு செய்துள்ளனா்.

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் கருத்தரங்கம் ஜனவரி 28 ஆம் தேதி தொடங்குகிறது. 29 ஆம் தேதி பயிற்சி பட்டறைகளும் நடைபெறுகின்றன. கருத்தரங்கின் நிறைவு விழா ஜனவரி 29 ஆம் தேதி பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

SCROLL FOR NEXT