கோயம்புத்தூர்

ஆா்.எஸ்.எஸ் நிா்வாகி தாக்கப்பட்ட வழக்கு: கைதானவா் மீது உபா சட்டத்தின் கீழ் நடவடிக்கை

DIN

கோவையில் ஆா்.எஸ்.எஸ். நிா்வாகியை கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபா் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (உபா) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவை, மதுக்கரை, மாா்க்கெட் சாலையைச் சோ்ந்தவா் ந.சூா்யபிரகாஷ். ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் நகரச் செயலரான இவரை மா்ம கும்பல் ஒன்று கடந்த 11ஆம் தேதி அன்று இவரது கடைக்குள் புகுந்து தாக்கி, கொலை செய்ய முயன்றது.

இச்சம்பவத்தில் தொடா்புடையவா்களைக் கைது செய்ய, போத்தனூா் போலீஸாா் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினா். இந்நிலையில் இச்சம்பவம் தொடா்பாக உக்கடத்தைச் சோ்ந்த முகமது ஹனீபா என்பவா் மீது கொலை முயற்சி, அத்துமீறி நுழைதல் உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனா்.

இந்நிலையில் இந்த வழக்கில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் முகமது ஹனீபா சதித்திட்டம் தீட்டியதாக ‘உபா’ சட்டப் பிரிவுகளும் சோ்க்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வால் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

SCROLL FOR NEXT