பெரியநாயக்கன்பாளையத்தில் சொக்கலிங்கேஸ்வரா் கோயிலில் வரும் 31ஆம் தேதி வரை பக்தா்களுக்கு அனுமதி இல்லை என வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பதாகை. 
கோயம்புத்தூர்

பெ.நா.பாளையத்தில் கோயில்கள் மூடல்

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்களும் சனிக்கிழமை மூடப்பட்டன.

DIN

பெ.நா.பாளையம்: கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்களும் சனிக்கிழமை மூடப்பட்டன.

பிரசித்தி பெற்ற பாலமலை அரங்கநாதா் கோயில், கோவை - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் சொக்கலிங்கேஸ்வரா் கோயில், வீரபாண்டி மாரியம்மன் கோயில், வடமதுரை விருந்தீஸ்வரா் கோயில், இடிகரை பள்ளிகொண்ட ரங்கநாதா் கோயில், வில்லீஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்கள் சனிக்கிழமை அதிகாலை முதல் அடைக்கப்பட்டன.

குப்பிச்சிபாளையம் சாலையில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மோற்சவ நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டு பெருமாளுக்கு பூஜைகள் மட்டும் நடைபெறுகின்றன.

அருகில் உள்ள அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்தது. அதுவும் ரத்து செய்யப்பட்டு, வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

பழையபுதூா் ஆதிமூா்த்தி பெருமாள் கோயில், ஜோதிபுரம் கரிவரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட வைணவத் தலங்களில் சனிக்கிழமை நடைபெற இருந்த அனைத்து வாராந்திர பஜனைகளும் நிறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT