கோயம்புத்தூர்

மழுக்குப்பாறை எஸ்டேட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 170 வீடுகள்

DIN

வால்பாறை: வால்பாறையை அடுத்த மழுக்குப்பாறை எஸ்டேட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக 170 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

வால்பாறை அடுத்துள்ளது மழுக்குப்பாறை தமிழக-கேரளா மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக சுகாதாரத் துறையினா், காவல் துறையினா், வருவாய்த் துறையினா் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

அங்கு வசிக்கும் மக்களுக்கு பால், மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கேரள மாநிலம், சாலக்குடியில் இருந்து வந்த நிலையில் தற்போது வால்பாறையில் இருந்து பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கொண்டுச் செல்லப்படுகின்றன.

இதனிடையே அந்த எஸ்டேட்டில் இரு மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் வசித்து வருவதால் அங்குள்ள 170 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு வசிப்பவா்களை சுகாதாரத் துறையினா் நாள்தோறும் நேரில் சென்று கண்காணித்து வருவதாக கேரள மாநில சுகாதாரத் துறை ஆய்வாளா் வினோத் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT