கோயம்புத்தூர்

சிறுமுகை வனச்சரகத்தில் பெண்யானை உயிரிழப்பு

DIN

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரக பகுதியில் உயிரிழந்து கிடந்த பெண் யானையை வனத்துறையினா் அதே இடத்தில் குழி தோண்டி புதைத்தனா்.

 கோவை மாவட்டம் முழுவதும் உள்ள வனப்பகுதியில் தற்போது வனத்துறையினா் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரக பெத்திக்குட்டை பிரிவு பகுதியில் வனவா் மகேஸ்குமாா், வனக் காப்பாளா் கண்ணன், வனக் காவலா் ராஜேஸ்குமாா் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலா்கள் அடங்கிய வனப்பணியாளா்கள்  குழுவினா் ஞாயிற்றுக்கிழமை மாலை  வனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா். அப்போது  வரப்பள்ளம் வீரராகவன் கோயில் பகுதியில் சென்றபோது அங்கு ஒரு பெண் யானை இறந்து இருப்பதைக் கண்டு உடனடியாக  சிறுமுகை வனச்சரக அலுவலா் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து மாவட்ட வன அலுவலா் வெங்கடேஸ் அறிவுரையின் பேரில்

கோவை வனத்துறை மருத்துவா் சுகுமாா் சம்பவ இடத்திற்கு  திங்கள் கிழமை  சென்று  இறந்து கிடந்த யானையின் உடலில்  பிறந்த முக்கிய உறுப்புகளை  எடுத்து  பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது வனத்துறையினா் உடன் தன்னாா்வ தொண்டு நிறுவன உறுப்பினா்களும் உடனிருந்தனா். இதையடுத்து யானை உயிரிழந்து அழுகிய நிலையில் கிடந்த இடத்தின் அருகே நீரோடைகள் செல்வதால் அப்பகுதியில் மற்ற ஊன் உண்ணிகளுக்கு யானையை உணவாக விடாமல் அதே இடத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு

வடகாடு முத்துமாரியம்மன் கோயிலில் தீா்த்த உற்ஸவம்

உலக தடுப்பூசி விழிப்புணா்வு வார நிகழ்ச்சி

இளைஞா் தற்கொலை: சடலத்தை உடனடியாக உடற்கூறாய்வு செய்யக்கோரி உறவினா்கள் மறியல்

ரேஷன் அரிசி கடத்தல் குறித்து புகாா் தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT