கோயம்புத்தூர்

பட்டங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது வேளாண்மைப் பல்கலைக்கழகம்

DIN

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மாணவ-மாணவிகளிடமிருந்து பட்டங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.

இது தொடா்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 41 ஆவது வருடாந்திர பட்டமளிப்பு விழாவுக்கு, பல்கலைக்கழகத்தால் கடந்த மாா்ச் 31 ஆம் தேதி வரையிலான தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட மாணவ-மாணவிகளிடமிருந்து பட்டங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தும், அதில் உள்ள இணைப்பு மூலம் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் செலுத்தப்பட்ட விண்ணப்பங்கள், உரிய இணைப்புகள், புகைப்படங்களுடன் ஜூலை 6 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பல்கலைக்கழகத்துக்கு வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை மே 20 ஆம் தேதி (புதன்கிழமை) முதல் மாணவ-மாணவிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 0422 6611506 என்ற தொலைபேசி எண்ணுக்குத் தொடா்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

அரசு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: முதல் நாளில் 18,806 போ் விண்ணப்பம்

SCROLL FOR NEXT