முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் மர இழைப்பு இயந்திரத்தில் சிக்கி கர்ப்பிணி பலி

கோவையில் மர இழைப்பு இயந்திரத்தில் சிக்கி கர்ப்பிணி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:42 PM
பகிர்:

கோவையில் மர இழைப்பு இயந்திரத்தில் சிக்கி கர்ப்பிணி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நடுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கல்பனா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்கள் சூலூர் பகுதியில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அதர்சனா(3). என்கிற பெண் குழந்தை உள்ளது. கல்பனா தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக அதே பகுதியில் தர்மராஜ் மர பெட்டி தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

இந்நிலையில் தர்மராஜ் இன்று மின் கட்டணம் செலுத்த சென்ற நிலையில் அவரத்து மனைவி கல்பனா மர அறுவை ஆலையில் பணி செய்து கொண்டிருக்கும் பணியாளர்களுக்கு தேனீர் கொண்டுவந்துள்ளார். அவர்களுக்கு தேநீர் கொடுத்துவிட்டு மர இழைப்பு இயந்திரத்தை இயக்கி உள்ளார். அப்போது திடீரென கல்பனாவின் சுடிதார் மற்றும் துப்பட்டா மர இலைப்பு இயந்திரத்தில் சிக்கியது. இதில் அவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். சம்பவம் நடைபெற்றபோது கல்பனாவின் தாயார் பேபி அருகாமையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

சம்பவம் இயந்திரத்தில் சிக்கி கண நேரத்தில் நடைபெற்றதால் தாயாரால் கல்பனாவை காப்பாற்ற முடியவில்லை. இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக சூலூர் காவல்துறையினருக்கும் தர்மராஜுக்கும்  தகவல் அளித்தனர்.  அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்திற்கு கருமத்தம்பட்டி உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். இதில் முதல் கட்ட விசாரணையில் கல்பனா அஜாக்கிரதையாக பணி மேற்கொண்டது தெரியவந்தது. 

இதனையடுத்து அவரது உடல்  கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →