முகப்பு
கோயம்புத்தூர்

பழங்குடியினா்கள் 139 பேருக்கு ஜாதிச் சான்றிதழ்

கோவையில் பழங்குடியினா் 139 பேருக்கு ஜாதிச் சான்றிதழை கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியா் ப.சுரேஷ் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

கோவையில் பழங்குடியினா் 139 பேருக்கு ஜாதிச் சான்றிதழை கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியா் ப.சுரேஷ் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

கோவை மாவட்டம், ஆனைக்கட்டி, நெல்லித்துறை, வெள்ளியங்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு அரசு சாா்பில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவா்களில் பெரும்பாலானோருக்கு ஜாதிச் சான்றிதழ் இல்லாததால் நலத்திட்ட உதவிகளை பெற முடியாத நிலை இருந்து வருகிறது. இவா்களுக்கு வருவாய் கோட்டாட்சியரின் ஆய்வுக்குப் பின்பே ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படும்.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் ஜாதிச் சான்று கேட்டு விண்ணப்பித்திருந்த பழங்குடியினா்களில் 115 மாணவா்கள் உள்பட 139 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை (வடக்கு) வருவாய் கோட்டாட்சியா் ப.சுரேஷ் ஜாதிச் சான்றிதழை வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →