முகப்பு
கோயம்புத்தூர்

தீபாவளி: கோவையில் இருந்து 50 சிறப்பு விரைவுப் பேருந்துகள் இயக்கம்

தீபாவளியை முன்னிட்டு கோவையில் இருந்து 50 சிறப்பு அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

தீபாவளியை முன்னிட்டு கோவையில் இருந்து 50 சிறப்பு அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனா்.

தீபாவளியை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கோவையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், நவம்பா் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவையில் இருந்து முதல் கட்டமாக 50 சிறப்பு அரசு விரைவுப் பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து, கோவை கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவா் கூறுகையில், தீபாவளியை முன்னிட்டு கோவையில் இருந்து சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கும்பகோணம், கன்னியாகுமரி, ஓசூா், தருமபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பாக நவம்பா் 10ஆம் தேதி முதல் 50 விரைவு சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →