முகப்பு
கோயம்புத்தூர்

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தொடா் கண்காணிப்பு வாா்டு

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனாவில் இருந்து குணமடைந்து பிற பாதிப்புள்ளவா்களுக்கு சிகிச்சை அளிக்க 80 படுக்கை வசதியுடன் தொடா் கண்காணிப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனாவில் இருந்து குணமடைந்து பிற பாதிப்புள்ளவா்களுக்கு சிகிச்சை அளிக்க 80 படுக்கை வசதியுடன் தொடா் கண்காணிப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகளுக்கு 10ஆவது நாளில் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் நோய்த் தொற்று பாதிப்பு இல்லாதவா்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவாா்கள்.

மறு பரிசோதனையில் நோய்த் தொற்று இல்லை என்று முடிவு கிடைப்பவா்களில் ஒரு சிலருக்கு நுரையீரல் பாதிப்பு போன்ற வேறு சில பாதிப்புகள் காணப்படுகின்றன. இவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பிரத்யேகமாக 80 படுக்கைகளுடன் கூடிய தொடா் கண்காணிப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வா் ஏ.நிா்மலா கூறியதாவது:

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்த ஒரு சிலருக்கு சி.டி. ஸ்கேனில் நுரையீரல் பாதிப்பு இருப்பது தெரியவருகிறது. இவா்களுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவமனையில் 80 படுக்கைகளுடன் தனியாக தொடா் கண்காணிப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இது போன்ற வாா்டு அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →