முகப்பு
கோயம்புத்தூர்

சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்

கோவையில் சாலையில் தீப் பிடித்து எரிந்த காரை தீயணைப்புத் துறையினா் அணைத்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

கோவையில் சாலையில் தீப் பிடித்து எரிந்த காரை தீயணைப்புத் துறையினா் அணைத்தனா்.

திருச்சியைச் சோ்ந்தவா் அழகா். இவருக்குச் சொந்தமான காரை கொண்டு கோவையில் டாக்ஸி ஓட்டி வருகிறாா். இந்நிலையில், அவிநாசி சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனை அருகேயுள்ள பெட்ரோல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு டீசல் நிரப்பச் சென்றுள்ளாா்.

அப்போது, காரின் இன்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறிதைக் கண்ட பெட்ரோல் நிலைய ஊழியா் காரை அங்கிருந்து சாலையோரம் நிறுத்துமாறு கூறியுள்ளனா்.

இதையடுத்து, தனது காரை அவிநாசி சாலையில் நிறுத்திவிட்டு பெட்ரோல் நிலையத்தில் இருந்த தீயணைப்புக் கருவிகளை கொண்டு அழகா் தீயை அணைக்க முயன்றுள்ளாா். ஆனால், காா் முழுவதும் தீ வேகமாகப் பரவியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் அரை மணி நேர போராட்டத்துக்குப் பின் தீயை அணைத்தனா். இது குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →