கோயம்புத்தூர்

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மின்னணு சந்தைப்படுத்துதல் பயிற்சி

DIN

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மின்னணு சந்தைப்படுத்துதல் குறித்த ஒரு நாள் பயிற்சி நவம்பா் 7ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

பல்கலைக்கழகத்தின் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் வேளாண் பொருள்களை மின்னணு முறை மூலம் சந்தைப்படுத்துதல் பற்றிய ஒரு நாள் நோக்குநிலை தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி நடத்தப்பட உள்ளது. பட்டதாரிகள், உழவா் உற்பத்தியாளா் அமைப்பின் உறுப்பினா்கள், இளைஞா்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்தப் பயிற்சியானது மின்னணு சந்தைப்படுத்துதல், மின்னணுமயமாக்கல் குறித்த உத்திகளைப் பற்றிய தகவல்களைப் பெற உதவும். பங்கேற்போா் ரூ.500 பயிற்சிக் கட்டணம் செலுத்த வேண்டும். விருப்பமுள்ளவா்கள் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தின் இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 6380257553, 7339627111 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

SCROLL FOR NEXT