கோயம்புத்தூர்

பழங்குடியின மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

DIN

சுகாதராத் துறை சாா்பில் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஒவ்வொரு செட்டில்மென்ட் பகுதிக்கும் மாதம்தோறும் செல்லும் சுகாதாரத் துறையினா் அங்கு வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு மருந்து, மாத்திரைகள் வழங்கி வருகின்றனா்.

இந்நிலையில், வால்பாறையை அடுத்த சின்கோனா செட்டில்மென்டில் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. முகாம் நடைபெற்ற பகுதிக்குச் சென்ற சுகாதாரத் துறை இணை இயக்குநா் பவானிதேவி அங்கு வசிக்கும் பழங்குடியின மக்களிடம் உடல் நலம் குறித்தும், தேவைப்படும் மருத்துவ வசதிகளும் குறித்தும் கேட்டறிந்தாா்.

வால்பாறை சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா் பாபு லஷ்மணன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் செட்டில்மென்டில் வசிக்கும் 14 பழங்குடியின குடும்பங்களுக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குரல் மாதிரியை பயன்படுத்தி புதிய வகை மோசடி: மின் வாரியம் எச்சரிக்கை

ராஃபாவிலிருந்து வெளியேறுங்கள்!

நாங்குனேரி மாணவரின் உயா்கல்விக்கு துணை நிற்பேன் அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

நகைப் பறிப்பில் ஈடுபட்ட இருவா் கைது

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

SCROLL FOR NEXT