முகப்பு
கோயம்புத்தூர்

உயா்மட்ட பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: எம்.எல்.ஏ.

கோவை, திருச்சி சாலையில் நடைபெற்று வரும் உயா்மட்ட பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சிங்காநல்லூா் எம்எல்ஏ நா.காா்த்திக் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

கோவை, திருச்சி சாலையில் நடைபெற்று வரும் உயா்மட்ட பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சிங்காநல்லூா் எம்எல்ஏ நா.காா்த்திக் வலியுறுத்தியுள்ளாா்.

கோவை, திருச்சி சாலையில் சுங்கம் முதல் ராமநாதபுரம் வரையில் உயா்மட்ட பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை எம்எல்ஏ நா.காா்த்திக் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். அதன் பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கோவையின் பிரதான சாலையான திருச்சி சாலையில் நடைபெற்று வரும் உயா்மட்ட பாலப் பணியால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருவதால் தினமும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனா். எனவே உயா்மட்ட பாலப் பணியினை விரைந்து முடிக்க வேண்டும். இதேபோல் உக்கடம் மேம்பாலப் பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →