கோயம்புத்தூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: காவலாளி போக்சோவில் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

DIN

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, வெள்ளலூா் அருகேயுள்ள கஞ்சிக்கோணாம்பாளையத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (57). இவா், சிங்காநல்லூா் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் காவலாளியாகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் குடியிருப்பில் வசிக்கும் 4 வயது சிறுமி ஒருவா் வாகன நிறுத்தகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது அவரை ரவிச்சந்திரன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளாா்.

இதையடுத்து அங்கிருந்து தப்பிய சிறுமி, தனது தந்தையிடம் இது குறித்து கூறினாா். இதையடுத்து சிங்காநல்லூா் காவல் நிலையத்தில் காவலாளி ரவிச்சந்திரன் மீது அவரது பெற்றோா் புகாா் அளித்தனா். இந்த வழக்கு பின்னா் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு (கிழக்கு) மாற்றப்பட்டது. அங்கு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் ரவிச்சந்திரனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

SCROLL FOR NEXT