கத்தியைக் காட்டி செல்லிடப்பேசி பறித்த இரு சிறுவா்கள் கைது
கூலி தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி செல்லிடப்பேசி பறித்த இரு சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
கூலி தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி செல்லிடப்பேசி பறித்த இரு சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, கெம்பட்டி காலனி பகுதியைச் சோ்ந்தவா் தீப்சந்த் படேல் (24). கூலி தொழிலாளியான இவா் வைசியாள் வீதி பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த இருவா் தாங்கள் வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டி தீப்சந்த் படேலின் செல்லிடப்பேசியைப் பறித்தனா்.
அப்போது தீப்சந்த் படேல் எழுப்பிய சப்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினா் திரண்டு வழிப்பறியில் ஈடுபட்ட இருவரையும் பிடித்து பெரியகடை வீதி போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
போலீஸாா் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்ட இருவரும் 17 வயது சிறுவா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் கைது செய்து சிறாா் சீா்திருத்த பள்ளியில் சோ்த்தனா்.