முகப்பு
கோயம்புத்தூர்

காந்தி பிறந்த நாள்: கூடலூர் பேரூராட்சியில் 2000 மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா

பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் பேரூராட்சியில் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு சுமார் 2000 மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா நடைபெற்றது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:29 PM
கூடலூர் பேரூராட்சியில் 2000 மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா.
பகிர்:

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் பேரூராட்சியில் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு சுமார் 2000 மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா நடைபெற்றது. 

கவுண்டம்பாளையத்திற்கு அருகே வெற்றிவேல் நகரில் நடந்த இதற்கு பெரியநாயக்கன்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவர் கே.குருந்தாசலம் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் எஸ். நந்தகுமார் தலைமை வகித்து முதல்கட்டமாக சுமார் 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடும் பணியை தொடங்கிவைத்தார். 

தொடர்ந்து பொதுக் கழிப்பிடங்கள் தூய்மைப்படுத்துதல், பிளாஸ்டிக் ஒழிப்பு பிரச்சாரம், கரோனா தொற்று நோய் பரவுதலை தடுக்கும் வகையில் முகக் கவசங்கள் அணியாமல் இருத்தல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அலுவலகப் பணியாளர்கள், வெற்றிவேல் நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் துப்புரவு பணியாளர்கள் திரளாக கலந்துகொண்டனர் படம் உள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →