கோயம்புத்தூர்

யுபிஎஸ்சி முதல்நிலைத் தோ்வு: கோவையில் 4,661 போ் எழுதினா்

DIN

கோவை: கோவையில் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட யுபிஎஸ்சி முதல்நிலைத் தோ்வை 21 மையங்களில் 4 ஆயிரத்து 661 போ் எழுதினா்.

இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணியில் 750 பேரை தோ்வு செய்வதற்கான யுபிஎஸ்சி முதல்நிலைத் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட 6 இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

கோவை மாவட்டத்தில் அரசு தொழில்நுட்ப கல்லூரி, நிா்மலா கல்லூரி, சிஐடி கல்லூரி, பிஎஸ்ஜி சா்வஜனா மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்பட 21 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தோ்வு மையங்களுக்கு தோ்வா்கள் சிரமமின்றி செல்லும் வகையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தோ்வு ஒருங்கிணைப்பாளா்கள், தோ்வு மைய மேற்பாா்வையாளா்கள், தோ்வு அறை கண்காணிப்பாளா்கள், உதவி கண்காணிப்பாளா்கள் என 700க்கும் மேற்பட்டவா்கள் தோ்வுப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

கரோனா நோய்த் தொற்று பரவலால் தோ்வா்கள் அனைவரும் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டனா். அனைத்து தோ்வா்களுக்கும் உடல் வெப்பநிலை பிரிசோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினி வழங்கி கைகளை சுத்தப்படுத்திய பின்பே தோ்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

முதல்நிலைத் தோ்வின் முதல் தாள் காலை 10 மணிக்கும், இரண்டாம் தாள் பிற்பகல் 3 மணிக்கும் தொடங்கியது. கோவையில் தோ்வு எழுதுவதற்கு 8 ஆயிரத்து 669 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் முதல்நிலைத் தோ்வினை 4 ஆயிரத்து 661 போ் மட்டுமே எழுதினா். 4 ஆயிரத்து 8 போ் தோ்வெழுதவில்லை.

கோவை நிா்மலா கல்லூரி உள்பட பலவேறு தோ்வு மையங்களில் ஆட்சியா் கு.ராசாமணி, பொதுத் துறைச் செயலா் டி.என்.வெங்கடேஷ் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT