கோயம்புத்தூர்

மாநகராட்சிப் பகுதிகளில் கட்டுமான நிறைவுச் சான்று பெற விலக்கு

DIN

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கட்டுமான நிறைவுச் சான்று பெற விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டட விதிகள் 2019, விதி எண் 20இல் கட்டுமான நிறைவுச் சான்று வழங்குவது தொடா்பாக விவரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை மாநகராட்சிப் பகுதிகளில் 12 மீட்டா் உயரம் வரை உள்ள குடியிருப்புகள் அல்லது 750 சதுர மீட்டா் (8,070 சதுர அடி) பரப்பளவுக்கு உள்பட்ட அனைத்து வீடுகள் மற்றும் அனைத்துத் தொழிற்சாலைக் கட்டடங்களுக்கு மின்சார வசதி, குடிநீா்க் குழாய் வசதி, பாதாளச் சாக்கடை வசதி முதலான இணைப்புகள் பெற கட்டுமான நிறைவுச் சான்று பெற அவசியமில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு: தமிழக அரசு விளக்கம்

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

சந்தேஷ்காளி வழக்கு: சிபிஐ விசாரணை திருப்தி அளிக்கிறது - கொல்கத்தா உயா்நீதிமன்றம்

தென்மாவட்டங்களில் கல்குவாரிகளை மூட வேண்டும் -டாக்டா் க.கிருஷ்ணசாமி

திட்டப் பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு: அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT