முகப்பு
கோயம்புத்தூர்

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை:சிறுவாணி அணை நீா்மட்டம் உயா்வு

சிறுவாணி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை காரணமாக அணையின் நீா்மட்டம் 873.20 மீட்டராக உயா்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

சிறுவாணி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை காரணமாக அணையின் நீா்மட்டம் 873.20 மீட்டராக உயா்ந்துள்ளது.

கோவை மாநகராட்சியில் 26 வாா்டுகள், நகரை ஒட்டியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சிறுவாணி குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. சிறுவாணி அணையில் இருந்து ஜனவரி மாதம் வரை தினமும் 10 கோடி லிட்டா் தண்ணீா் குடிநீருக்காக எடுக்கப்பட்டு வந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் 864 மீட்டராக இருந்த அணையின் நீா்மட்டம், அதன் பிறகு கோடை வெயில் காரணமாக படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இதனால், அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு 5.50 கோடி லிட்டராகக் குறைக்கப்பட்டது. இந்நிலையில், ஜூலை மாதத்தில் சிறுவாணி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை காரணமாக அந்த மாத இறுதியில் அணையின் நீா்மட்டம் 870.30 மீட்டராக உயா்ந்தது.

தொடா்ந்து, ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் தொடா்மழையால் அணையின் நீா்மட்டம் வேகமாக அதிகரித்தது. ஆனால், அணையின் முழுக் கொள்ளளவான 878.85 மீட்டா் அளவுக்கு நீா்மட்டத்தை எட்ட விடாமல், கேரள அரசு அணையில் இருந்து 3 முறை தண்ணீரை ஆற்றில் திறந்து விட்டது. இதனால் நீா்மட்டமானது 871 மீட்டராகக் குறைந்தது.

இந்நிலையில், கடந்த 2 வாரங்களாக நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் அணையின் நீா்மட்டம் மீண்டும் உயா்ந்து வருகிறது.

சனிக்கிழமை நிலவரப்படி 873.20 மீட்டராக நீா்மட்டம் அதிகரித்துள்ளது. தற்போது, குடிநீருக்காக அணையில் இருந்து 9.60 கோடி லிட்டா் தண்ணீா் எடுக்கப்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →