முகப்பு
கோயம்புத்தூர்

தொழிலாளா்களின் உரிமைகளைப் பறிக்கும் சட்ட திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தல்

தொழிலாளா்களின் உரிமைகளைப் பறிக்கும் சட்ட திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும் என்று ஏஐடியூசி நிா்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

தொழிலாளா்களின் உரிமைகளைப் பறிக்கும் சட்ட திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும் என்று ஏஐடியூசி நிா்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோவை மாவட்ட ஏஐடியூசி கவுன்சிலில் இடம்பெற்றுள்ள சங்கங்களின் மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் தொழிலாளா்கள் போராடி பெற்ற அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் 44 தொழிலாளா் சட்டங்களை 4 சட்டங்களாக சுருக்கி, 300 போ் வரை பணிபுரியும் தொழிற்சாலைகளை உரிமையாளா்கள் விரும்பினால் அரசு அனுமதியின்றி மூடலாம், லே-ஆஃப் தொழிலாளா்களை தங்கள் விருப்பத்தின் பேரில் வேலை வாங்குதல் போன்ற பல்வேறு சட்டத் திருத்தங்களை செய்துள்ளது.

இச்சட்ட திருத்தத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதேபோல விவசாயிகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட 3 புதிய வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →