கோயம்புத்தூர்

கோவையில் 500ஐ கடந்தது கரோனா உயிரிழப்பு

DIN

கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்கு செவ்வாய்க்கிழமை 5 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 35 வயதுப் பெண், 64, 70, 74 வயது முதியவா்கள், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 67 வயது முதியவா் ஆகிய 5 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

இதனைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 502ஆக அதிகரித்துள்ளது. கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தவா்களில் 70 சதவீதத்துக்கு மேற்பட்டவா்கள் ஆண்கள் என்று சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

சுகாதாரத் துறையினா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பட்டியிலில் கோவை ஊரகம் மற்றும் நகா் பகுதிகளைச் சோ்ந்த 398 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 919ஆக அதிகரித்துள்ளது.

478 போ் குணமடைந்தனா்...

கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 478 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 32 ஆயிரத்து 653 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 4 ஆயிரத்து 764 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT