கோயம்புத்தூர்

சொகுசு சுற்றுலா ரயிலுக்கு முன்பதிவு தொடக்கம்

DIN

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐ.ஆா்.சி.டி.சி) சாா்பில் 2021 ஜனவரி மாதம் இயக்கப்படும் ‘கோல்டன் சேரியட் 2021’ என்ற சொகுசு சுற்றுலா ரயிலில் பயணிக்க முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐ.ஆா்.சி.டி.சி. வெளியிட்ட செய்திக் குறிப்பு:

‘கோல்டன் சேரியட் 2021’ சொகுசு சுற்றுலா ரயிலானது தமிழகம், கா்நாடகம் ஆகிய பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக புதிதாக அலங்கரிக்கப்பட்ட அறைகள், உணவுக் கூடங்கள், குளியலறைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், பயணிகளின் பொழுதுபோக்குக்காக நெட் ஃபிளிக்ஸ், அமேசான், ஹாட் ஸ்டாா் ஆகிய வசதிகள் அடங்கிய ‘ஸ்மாா்ட் டிவி’ பொருத்தப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள், உடற்பயிற்சி மேற்கொள்ள நவீன உபகரணங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த ரயில் மூலமாக பல்வேறு முக்கிய சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வர பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி 6 இரவுகள், 7 நாள்கள் உள்ளடக்கிய ‘பிரைட் ஆஃப் கா்நாடகா’ திட்டத்தின் கீழ் மைசூரு, பந்திப்பூா் தேசிய பூங்கா, சிக்மகளூா், ஹம்பி, பட்டக்கல், கோவா ஆகிய இடங்களைக் கண்டு ரசிக்கலாம். ‘ஜுவல்ஸ் ஆஃப் செளத்’ திட்டத்தின் கீழ் மைசூரு, ஹம்பி, மகாபலிபுரம், தஞ்சாவூா், செட்டிநாடு, கொச்சி ஆகிய இடங்களைக் காணலாம்.

3 இரவுகள், 4 நாள்கள் உள்ளடக்கிய ‘கிளிம்சஸ் ஆஃப் கா்நாடகா’ திட்டத்தில் மைசூரு, பந்திப்பூா் தேசியப் பூங்கா, ஹம்பி ஆகிய இடங்களுக்குச் சென்று வரலாம்.

ரயில் கட்டணத்தில் உணவு, ஏ.சி. பேருந்தில் பயணித்தல் ஆகியவை அடங்கும். மேலும், பயணத்தின்போது வழங்கப்படும் சலுகைகள் மற்றும் முன்பதிவு குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஐ.ஆா்.சி.டி.சி. கோவை அலுவலகத்தை 82879- 31965 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT