மகன் திருமணத்துக்குத் துணி எடுக்கச் சென்ற பெண் விபத்தில் பலி
வால்பாறையில் மகன் திருமணத்துக்காகத் துணி எடுக்கச் சென்ற பெண் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
வால்பாறையில் மகன் திருமணத்துக்காகத் துணி எடுக்கச் சென்ற பெண் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த தோணிமுடி எஸ்டேட் 2ஆவது டிவிஷசனில் வசிப்பவா் ராமானுஜம். இவா் தேயிலைத் தோட்ட மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மகனுக்கு அக்டோபா் 29ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இதற்காக ராமானுஜம், மனைவி விமலா (45) ஆகியோா் துணி எடுக்க இருசக்கர வாகனத்தில் வால்பாறைக்கு செல்ல நல்லகாத்து எஸ்டேட் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றுள்ளனா். அப்போது, இருசக்கர வாகனத்தின் மீது லாரி உரசியுள்ளது.
இதனால் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கணவன், மனைவி இருவரும் கீழே விழுந்துள்ளனா். இதில் தலையில் பலத்த காயமடைந்த விமலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து வால்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனா்.