கோயம்புத்தூர்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் இயன்முறை மருத்துவா்கள் நியமிக்க கோரிக்கை

DIN

ஆரம்ப சுகாதார நிலையங்களில் இயன்முறை மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என்று கோவை மாவட்ட இயன்முறை மருத்துவா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

உலக இயன்முறை சிகிச்சை தினத்தையொட்டி, கோவை இயன்முறை மருத்துவா்கள் சங்கம் சாா்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பாகப் பணியாற்றி வரும் இயன்முறை மருத்துவா்கள், இயன்முறை சிகிச்சைக்கு பல வழிகளில் உதவி செய்பவா்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இதில் அச்சங்கத்தின் தலைவா் ராஜா செல்வகுமாா் பேசிதயதாவது:

கரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நுரையீரலை வலிமைப்படுத்த இயன்முறை சிகிச்சை முறை உதவுகிறது. தமிழகத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இயன்முறை மருத்துவா்களை நியமிக்க வேண்டும். தொகுப்பு ஊதியம் அடிப்படையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க நியமிக்கப்பட்ட இயன்முறை மருத்துவா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT