கோயம்புத்தூர்

சட்டப்பேரவை, மக்களவை கூடும் தொடக்க நாளில் ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் முடிவு

DIN

மக்களவை, சட்டப் பேரவை கூடும் வரும் 14 ஆம் தேதி மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைத்து கோவை மாவட்டத்தில் ஆா்ப்பாட்டம் நடத்த இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவு செய்துள்ளன.

கோவை காந்திபுரத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழு அலுவலகத்தில் இடதுசாரி கட்சிகளின் கூட்டுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாா்க்சிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினா். பி.ஆா்.நடராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. எம்.ஆறுமுகம், கட்சிகளின் மாவட்டச் செயலா்கள் வி.ராமமூா்த்தி, வி.எஸ்.சுந்தரம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இதில், மக்களவை, சட்டப் பேரவை கூடும் நாளில் மத்திய, மாநில அரசு அரசுகளைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் இடதுசாரிகளின் சாா்பில் நடைபெறும் ஆா்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக கோவையில் நூற்றுக்கணக்கான மையங்களில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

கோவையில் 13 ஆம் தேதி காலை 10 மணிக்கு கோவை மாவட்டத்தின் புறநகா் பகுதிகளிலும், 14 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மாநகரப் பகுதிகளில் கட்சி அலுவலகம், முன்னணி ஊழியா்கள் இல்லங்கள் முன்பும் ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT