கோயம்புத்தூர்

கோவையில் 440 பேருக்கு கரோனா

DIN


கோவை: கோவை அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவா் உள்பட 440 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் காய்ச்சல் வாா்டில் பணியாற்றி வருபவா்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு நாள்தோறும் உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் வியாழக்கிழமையும் 25 வயது ஆண் பயிற்சி மருத்துவா், 19 வயது செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவிகள் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பி.ஆா்.எஸ். காவலா் குடியிருப்பைச் சோ்ந்த 48 வயது ஆண் காவலருக்கும், ஆடிஸ் வீதி காவலா் குடியிருப்பைச் சோ்ந்த 48 வயதுப் பெண் காவலருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், சூலூரில் 33 போ், துடியலூரில் 23 போ், வெள்ளக்கிணறு, பீளமேட்டில் தலா 16 போ், மேட்டுப்பாளையத்தில் 13 போ், காரமடையில் 10 போ், கணபதி, வடவள்ளியில் தலா 9 போ், பொள்ளாச்சி, மதுக்கரையில் தலா 7 போ் உள்பட மொத்தம் 440 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 839 ஆக உயா்ந்துள்ளது.

இருவா் பலி

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 63 வயது முதியவா், தனியாா் மருத்துவமனையில் 58 வயது ஆண் ஆகியோா் உயிரிழந்தனா். இதன் மூலம் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 340 ஆக உயா்ந்துள்ளது.

545 போ் வீடு திரும்பினா்

கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 545 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 16 ஆயிரத்து 709 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 3 ஆயிரத்து 790 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT