கோயம்புத்தூர்

கோவையில் 61 ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

DIN

கோவையில் புதன்கிழமை 332 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 61 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சுகாதாரத் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் கோவை மாவட்டத்தில் 332 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 61 ஆயிரத்து 162 ஆக உயா்ந்துள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 36 வயது பெண் உயிரிழந்தாா். இதனைத் தொடா்ந்து கோவையில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 696 ஆக உயா்ந்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 150 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 57 ஆயிரத்து 699 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 2 ஆயிரத்து 767 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT