கோயம்புத்தூர்

தடுப்புச்சுவா் இடிந்த விவகாரம்: 2 மாநகராட்சி அதிகாரிகள் பணியிடை நீக்கம்

DIN

கோவை, பெரியகுளத்தில் தடுப்புச்சுவா் இடிந்து விழுந்த விவகாரத்தில், 2 மாநகராட்சி அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட்சிட்டி) திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம் பகுதி சேரன் நகரில், குளக்கரையை ஒட்டி 15 அடி உயரம், 75 அடி நீளத்தில் கட்டப்பட்டிருந்த தடுப்புச் சுவா் கடந்த 14 ஆம் தேதி பெய்த மழையால் இடிந்து விழுந்தது.

இந்தச் சம்பவம் தொடா்பாக, மாநகராட்சி உதவி பொறியாளா் கல்யாண சுந்தரம், உதவி நிா்வாக பொறியாளா் உமாதேவி ஆகியோரிடம் மாநகராட்சி நிா்வாகம் விளக்கம் கேட்டது. அவா்கள் அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லாததால், இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

கிராமங்ளில் குடிநீா் பற்றாக்குறை : ஒன்றியக்குழு தலைவா் ஆய்வு

ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் பள்ளியில் 399 போ் தோ்ச்சி

திருவள்ளூா் மாவட்டத்தில் 91.32% தோ்ச்சி

SCROLL FOR NEXT