முகப்பு
கோயம்புத்தூர்

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்: போக்சோ சட்டத்தின் கீழ் சிறையிலடைப்பு

மேட்டுப்பாளையத்தில் சிறுமியைக் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த இளைஞருக்கு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 3 ஆகஸ்ட், 2021 at 10:08 PM
சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்: போக்சோ சட்டத்தின் கீழ் சிறையிலடைப்பு
பகிர்:

மேட்டுப்பாளையத்தில் சிறுமியைக் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த இளைஞருக்கு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள இடையார்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (20). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் சிறுமி ஒருவரைக் கடத்தி திருமணம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து அச்சிறுமியின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் அடிப்படையில் சிறுமியக் கடத்தியது, பாலியல் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட குற்றங்களின் அடிப்படையில் போக்சோ சட்டப்பிரிவு உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் கார்த்திக் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து சிறுமியை மீட்ட காவல்துறையினர் கார்த்தியை கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ரவி (பொறுப்பு) பாதிக்கப்பட்ட சிறுமிக்கி ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ரூ.30,000 அபராதம் விதித்து 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.