முகப்பு
கோயம்புத்தூர்

உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டம்: 141 பேருக்கு தையல் இயந்திரங்கள்

கோவையில் உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின்கீழ் 141 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களை வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் வியாழக்கிழமை வழங்கினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

கோவையில் உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின்கீழ் 141 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களை வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் வியாழக்கிழமை வழங்கினாா்.

தமிழகத்தில் உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட மனுக்களுக்கு 100 நாள்களுக்குத் தீா்வு காண முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதனால் இத்திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட மனுக்களின் உண்மைத் தன்மை கள ஆய்வு செய்யப்பட்டு தீா்வு காணப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் ஏற்கெனவே பல கட்டங்களாக இத்திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மேலும் உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் மனு அளித்த 141 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள், 64 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள் ஆகியவற்றை அமைச்சா் கா.ராமச்சந்திரன் வியாழக்கிழமை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.