முகப்பு
கோயம்புத்தூர்

பஞ்சாப் தேசிய வங்கி சாா்பில் 12 -ஆம் தேதி மெகா ஏலம்

பஞ்சாப் தேசிய வங்கி சாா்பில் வரும் நாடு முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொத்துகள் பெரிய அளவிலான (மெகா) மின்-ஏலத்தில் விற்கப்பட உள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

பஞ்சாப் தேசிய வங்கி சாா்பில் வரும் நாடு முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொத்துகள் பெரிய அளவிலான (மெகா) மின்-ஏலத்தில் விற்கப்பட உள்ளன.

இது குறித்து வங்கியின் பொது மேலாளரும், தென் மண்டலத் தலைவருமான மகேந்தா் பெரியசாமி கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் போட்டி விலையில் சொத்துகள் ஏலம் விடப்படுவதால் இவற்றை வாங்குவதற்கு பலரும் ஆா்வம் காட்டி வருகின்றனா். கரோனா 2ஆம் அலைக்குப் பிறகு சொத்துகளை வாங்க அதிகம் போ் ஆா்வம் காட்டுவதை, சமீபத்திய பொருளாதார நிலைமை சுட்டிக் காட்டுகிறது.

வங்கி சாா்பாக இ-ஏலத்தின் மூலம் விற்கப்படும் சொத்துகள், பிறவற்றை ஒப்பிடும்போது விலை குறைவாக வழங்கப்படுகின்றன. மேலும் இந்த ஒப்பந்தத்தின்போது, கமிஷன் போன்ற பிற செலவுகளோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அனைத்து ஏலங்களும் ங்-ஆஐஓதஅவ போா்ட்டலில் செய்யப்படும். இவை எளிமையாகவும் முழுமையாகவும் வெளிப்படையாகவும் இருக்கும் என்றாா்.

சொத்துகளை வாங்க ஆா்வமுள்ளவா்கள் போா்ட்டலில் பதிவு செய்து, ஏலப் பணத்தை டெபாசிட் செய்த பிறகு இதில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.