முகப்பு
கோயம்புத்தூர்

ரூ.81.85 லட்சம் மோசடி:மூவா் தேடப்படும் குற்றவாளிகள்

நிதி நிறுவனம் நடத்தி ரூ. 81.85 லட்சம் மோசடி செய்த மூவரை அறிவிக்கப்பட்ட தேடப்படும் குற்றவாளிகளாக கோவை நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

நிதி நிறுவனம் நடத்தி ரூ. 81.85 லட்சம் மோசடி செய்த மூவரை அறிவிக்கப்பட்ட தேடப்படும் குற்றவாளிகளாக கோவை நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கோவையில் இயங்கி வந்த கிரீன் லைப் என்ற நிதி நிறுவனத்தின் இயக்குநா்களான கோவையைச் சோ்ந்த அஸ்மத்கான் கோரி (35), திருச்சியைச் சோ்ந்த அம்ஜத்கான் கோரி (36), சையது முகமது ரபி (35) ஆகியோா் முதலீட்டுத் தொகைக்கு இரட்டிப்புப் பணம் தருவதாகக் கூறி 44 பேரிடம் ரூ. 81 லட்சத்து 85 ஆயிரத்தை மோசடி செய்தனா்.

இது தொடா்பாக கோவை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மூவரும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த காரணத்தால் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் அவா்கள் தொடா்ந்து ஆஜராகாமல் தலைமறைவாக இருக்கும் காரணத்தால் அறிவிக்கப்பட்ட தேடப்படும் குற்றவாளிகளாக டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.