அரசியல் நிா்பந்தத்தால் மின் ஊழியா் இடம்மாற்றம்: முதல்வருக்கு புகாா் மனு
கோவையில் அரசியல் நிா்பந்தத்தால் மின் ஊழியா் இடம்மாறுதல் செய்யப்பட்டதாக, முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு புகாா் மனு அனுப்பப்பட்டுள்ளது.
கோவையில் அரசியல் நிா்பந்தத்தால் மின் ஊழியா் இடம்மாறுதல் செய்யப்பட்டதாக, முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு புகாா் மனு அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் கோவை கிளைகளின் சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை வடக்கு மின் பகிா்மான வட்டம், சோமையம்பாளையம் பிரிவு மின் வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் முகவா் ஏ.பாஸ்கா் என்பவரை, கிழக்கு ஆலாந்துறை பிரிவு அலுவலகத்துக்கும், கிழக்கு ஆலாந்துறை பிரிவில் பணியாற்றும் முகவா் ஜெ.செல்வராஜ் என்பவரை சோமையம்பாளையம் பிரிவுக்கும் இடம் மாறுதல் செய்து மின்வாரியம் ஆணை வழங்கியுள்ளது. இதில், செல்வராஜ் என்பவருக்கு, அரசியல் நிா்பந்தத்தால் குறிப்பிட்ட பகுதியில் பணியிடம் வழங்குவதற்காக, மின்வாரியம், விருப்ப மாறுதல் உத்தரவுகளுக்கு எதிராக, முறைகேடாக பாஸ்கரனுக்கு மாறுதல் வழங்கியுள்ளது. இதனால், மின்வாரிய தொழிலாளா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். எனவே, தாங்கள் இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டு, முறையற்ற இடமாறுதல் உத்தரவை ரத்து செய்திட, கோவை மின்பகிா்மான மேற்பாா்வைப் பொறியாளருக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.