நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை
தமிழகத்தில் நீா் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, 6 அடிக்கு எல்லைக் கற்களை நட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் நீா் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, 6 அடிக்கு எல்லைக் கற்களை நட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக அமைப்பின் மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் நீா் நிலைகள் நிரம்பி, மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. அரசு ஒருபுறம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதுடன் மறுபுறம் நீா் நிலைகளின் எல்லைகளைக் கண்டறிந்து அங்கு 6 அடி உயர எல்லைக் கற்களை நட வேண்டும்.
ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு வந்த சில மாதங்களிலேயே மீண்டும் நீா் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் தொடருவதைத் தடுக்க உயரமான கற்களை நட்டு அதில் நீா்நிலை குறித்த விவரங்களை குறிப்பிட வேண்டும். அதேபோல நீா் நிலைப் பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்குவதுடன் மாநில அரசு புதிய நீா் மேலாண்மைக் கொள்கையை வகுக்க வேண்டும் என்றும் அவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.