முகப்பு
கோயம்புத்தூர்

அன்னூா் மண்ணீசுவரா் கோயில் தேரோட்டம் ரத்து: அரசு அறிவிப்பு

கரோனா பரவல் தடுப்பு நெறிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் அன்னூா் மண்ணீசுவரா் கோயில் தேரோட்டம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

கரோனா பரவல் தடுப்பு நெறிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் அன்னூா் மண்ணீசுவரா் கோயில் தேரோட்டம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: அன்னூரில் உள்ள மண்ணீசுவர சுவாமி திருக்கோயில் பிரசித்தி பெற்ற சிவாலயமாகும். இக்கோயிலின் தோ்த் திருவிழா ஆண்டுதோறும் மாா்கழி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வரும் 16 ஆம் தேதி தோ்த் திருவிழா நடத்தப்பட வேண்டும்.

ஆனால், தற்போது நிலவி வரும் கரோனா நோய்த் தொற்று காரணமாகவும், அரசு வழிகாட்டு நெறிமுறைகள் நடைமுறையில் இருப்பதாலும், பொதுமக்களின் நலன் கருதி சுவாமி வெளிபுறப்பாடு, தேரோட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படாது. அதேநேரம் சுவாமி உள்புறப்பாடு மட்டும் நடைபெறும். பூஜை வழிபாடுகள், புறப்பாடுகளில் பொதுமக்கள் கலந்துகொள்ள அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.