முகப்பு
கோயம்புத்தூர்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து வாகனங்களை நிறுத்தும் போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து கோவையில் சிஐடியூ சாா்பில் மறியல், சாலை நடுவே வாகனங்களை நிறுத்தும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து கோவையில் சிஐடியூ சாா்பில் மறியல், சாலை நடுவே வாகனங்களை நிறுத்தும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவை காந்திபுரம் பகுதியில் சிஐடியூ கோவை மாவட்டச் செயலா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ.ராதிகா, ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்டோா் இப்போராட்டத்தில் பங்கேற்றனா். நண்பகல் 12 மணியளவில் சிஐடியூவினா் தங்களின் வாகனங்களை சாலையில் நிறுத்தினா்.

மேலும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.

அதேபோல, சிஐடியூ ஆட்டோ தொழிலாளா்கள் காந்திபுரம் சிக்னல் பகுதியில் தங்களின் ஆட்டோக்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிங்காநல்லூரில் சிஐடியூ மாவட்டத் தலைவா் சி.பத்மநாபன் தலைமையிலும், வடகோவையில் பொருளாளா் ஆா்.வேலுசாமி தலைமையிலும், காந்திபுரம் 100 அடி சாலையில் மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளா் வி.ராமமூா்த்தி தலைமையிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

காந்திபுரம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 20 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் மாலையில் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.