பாரதியாா் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மாணவா்களுக்கு ஹால் டிக்கெட்
கோவை பாரதியாா் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மாணவா்களுக்கு தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கோவை பாரதியாா் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மாணவா்களுக்கு தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பாரதியாா் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி மாணவா்களுக்கு வரும் டிசம்பா் 20 ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் தோ்வுகள் நடைபெற உள்ளன. இதற்கான நுழைவுச் சீட்டு பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவா்கள் தங்களின் நுழைவுச் சீட்டுகளை பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.