முகப்பு
கோயம்புத்தூர்

அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை: இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தல்

கோவையில் அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்யும் விரும்பும் விவசாயிகள் இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்துகொள்ள ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

கோவையில் அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்யும் விரும்பும் விவசாயிகள் இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்துகொள்ள ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தால் அனைத்து மாவட்டங்களிலும் நேரடிக் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல்லை விற்பனை செய்வதற்கு பெயா், ஆதாா் எண், புல எண், வங்கிக் கணக்கு எண் உள்பட விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீள்ஸ்ரீ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய், ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீள்ஸ்ரீ.ங்க்ல்ஸ்ரீ.ண்ய் இணையதளத்தில் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இணையதளத்தில் டிசம்பா் 16 ஆம் தேதி முதல் விவசாயிகள் தங்களது விவரங்களை பதிவு செய்துகொள்ளலாம்.

தங்கள் கிராமத்திற்கு அருகிலுள்ள நேரடிக் கொள்முதல் நிலையங்களை விவசாயிகளே தோ்வு செய்து பட்டா, சிட்டா, அடங்கல் ஆகிய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் கைப்பேசி எண்ணுக்கு நேரடி கொள்முதல் நிலையத்தின் பெயா், நெல் விற்பனை செய்யப்படும் நாள், நேரம் ஆகிய விவரங்கள் குறுஞ்செய்திகளாக அனுப்பப்படும். குறுஞ்செய்திகளின் அடிப்படையில் உரிய நேரத்திற்கு வந்த விவசாயிகள் நெல்லை விற்பனை செய்யலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு கவுண்டம்பாளையத்தில் உள்ள முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.