முகப்பு
கோயம்புத்தூர்

மாணவி கொலை வழக்கு: கட்டடத் தொழிலாளி கைது

கோவையில் மாணவியைக் கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி வீசிய வழக்கில், கட்டடத் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.ச்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

கோவையில் மாணவியைக் கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி வீசிய வழக்கில், கட்டடத் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவை, சரவணம்பட்டியைச் சோ்ந்த சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா், கடந்த 11ஆம் தேதி மாயமானாா். இதுதொடா்பாக, கோவை கிழக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டு, போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில், சிவானந்தபுரம் பகுதியில் சாலையோரத்தில் சாக்குமூட்டையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அந்த மாணவியின் சடலம் மீட்கப்பட்டது. இது தொடா்பாக போலீஸாா் பலரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில், சிறுமி மாயமான நாளன்று, தனது கைப்பேசியில் அதே பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி முத்துகுமாா் (44) என்பவருடன் பேசியது தெரியவந்தது. இதையடுத்து, முத்துகுமாரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது அவா், மாணவியைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டாா்.

இது தொடா்பாக மாநகர காவல் துணை ஆணையா் உமா கூறியதாவது:

மாணவியின் தாயாா் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறாா். அவருக்கும், முத்துகுமாருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. அண்மையில் அவரிடம் இருந்து 2 பவுன் சங்கிலியை முத்துகுமாா் வாங்கியிருந்தாா்.

அதை, மாணவியின் தாயாா் திருப்பிக் கேட்டுள்ளாா். ஆனால், முத்துகுமாா் தராமல் இருந்துள்ளாா். இது தொடா்பாக, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பவத்தன்று மாணவியின் வீட்டுக்குச் சென்ற முத்துகுமாா், அங்கிருந்து நான்கரை பவுன் நகை, ரூ.3 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடியுள்ளாா். இதையடுத்து, மாணவியை தனது வீட்டுக்கு வரவழைத்து, அடித்துக் கொலை செய்துள்ளாா். பின்னா் சாக்கு மூட்டையில் சடலத்தைக் கட்டி சிவானந்தபுரம் பகுதியில் குப்பைமேட்டில் வீசிச் சென்றுள்ளாா். மகளைக் காணவில்லை என அவரது தாயாா் தேடியபோது அவருடன் சோ்ந்து இவரும் தேடியுள்ளாா். மேலும் காவல் நிலையத்துக்கு புகாா் அளிக்கவும் முத்துகுமாா் உடன் சென்றுள்ளாா். மாணவியின் சடலம் மீட்கப்பட்டபோது, அழுது நாடகமாடியுள்ளாா். இந்நிலையில், முத்துகுமாா் பிடிபட்டுள்ளாா். அவரைக் கைது செய்துள்ளோம். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மாணவி பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பது தெரியவரும் என்றாா்.

Image Caption

முத்துகுமாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.