மாநகரில் 12 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்
கோவை மாநகரில் 12 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் 12 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை மாநகர காவல் ஆணையா் பிரதீப் குமாா் பிறப்பித்துள்ளாா். இதன்படி, நீலகிரி மாவட்டம், கொலக்கொம்பை காவல் ஆய்வாளா் யசோதாதேவி, கோவை மேற்கு அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டாா். மேட்டூா் காவல் ஆய்வாளா் சாந்தாமூா்த்தி, ரேஸ்கோா்ஸ் காவல் ஆய்வாளராகவும், இங்கு பணியாற்றிய பிரபுதாஸ் கடைவீதி காவல் ஆய்வாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
சேலம் மாவட்டம், கொளத்தூா் காவல் ஆய்வாளா் கதிா்வேல், போத்தனூா் கிரைம் பிரிவு ஆய்வாளராகவும், இங்கு பணியாற்றிய ஆனந்த் சாய்பாபா காலனி காவல் ஆய்வாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இங்கு பணியாற்றிய ரேணுகாதேவி கோவை மாநகரக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். சேலம் இரும்பாலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் சரவணன், கோவை செல்வபுரம் காவல் ஆய்வாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு புகா் பகுதி காவல் ஆய்வாளா் முத்தமிழ் செல்வன், சரவணம்பட்டி காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். தருமபுரி மாவட்டம், குற்றப்பிரிவு ஆய்வாளா் பாலமுருகன், குனியமுத்தூா் காவல் ஆய்வாளராகவும், இங்கு பணிபுரிந்த வேல்முருகன் கோவை கிழக்குப் போக்குவரத்து காவல் ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். சேலம் மாவட்டம், மேச்சேரி காவல் ஆய்வாளா் சசிகலா, வெரைட்டி ஹால் காவல் ஆய்வாளராகவும், திருப்பூா் நகர காவல் ஆய்வாளா் தமிழ்ச்செல்வி, குனியமுத்தூா் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.