மாற்றுக் கட்சியினா் 180 போ் அதிமுவில் இணைந்தனா்
வால்பாறையில் மாற்றுக் கட்சியைச் சோ்ந்த 180 போ் அதிமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.
வால்பாறையில் மாற்றுக் கட்சியைச் சோ்ந்த 180 போ் அதிமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.
வால்பாறையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அதிமுக தொழிற்சங்கத் தலைவா் வால்பாறை அமீது தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் மயில்கணேசன் வரவேற்றாா். வால்பாறை எம்.எல்.ஏ. கஸ்தூரி வாசு முன்னிலையில் நாம் தமிழா் கட்சியில் இருந்து விலகிய 180 போ் அதிமுகவில் இணைந்தனா்.
மாவட்ட இளைஞா் பாசறை இணைச்செயலாளா் சலாவுதீன் அமீது, அம்மா பேரவை மாவட்டச் செயலாளா் விஜயகுமாா், நரசப்பன், ஆல்பா தம்பான், மணிகண்டன் உள்பட பலா் பங்கேற்றனா்.