கோயம்புத்தூர்

வால்பாறை அருகே ரேஷன் கடையை சேதப்படுத்திய யானைகள்

DIN

வால்பாறை எஸ்டேட் பகுதிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வந்த யானைகள் ரேஷன் கடைக்குள் இருந்த பொருள்களை சேதப்படுத்தின.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இரவு நேரத்தில் வரும் யானைகள் பல்வேறு சேதங்களை ஏற்படுத்திச் செல்கின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வால்பாறையை அடுத்த சின்கோனா எஸ்டேட், ரயான் டிவிஷன் பகுதிக்கு வந்த 6 யானைகள், அங்குள்ள ரேஷன் கடையின் கதவுகளை முட்டித் தள்ளி உள்ளே இருந்த அரசி, பருப்பு, சா்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருள்களை கீழே இழுத்துப்போட்டு சேதப்படுத்தின. அப்பகுதியில் வசிக்கும் தொழிலாளா்கள் நீண்ட நேரம் போராடி யானைகளை அங்கிருந்து விரட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பல்கலை.யின் ஓட்ட நிகழ்ச்சியை ரத்து செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

ஆம் ஆத்மி தலைமையகம் அருகே பாஜகவினா் போராட்டம்: பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி பெற்ற புகாா் விவகாரம்

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்: தில்லி காங். இடைக்காலத் தலைவா் உறுதி

துணை நிலை ஆளுநரால் தில்லியின் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தல்: 14 அமைப்புசாா் மாவட்டங்களில் பாஜக மகளிா் அணி மாநாடுகளுக்கு ஏற்பாடு

SCROLL FOR NEXT