கோயம்புத்தூர்

அடிப்படை வசதிகள் கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மாா்க்சிஸ்ட் கட்சியினா்

DIN

கோவை, இருகூா் பகுதியில் சாலை, கழிவுநீா் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரக் கோரி பேரூராட்சி அலுவலகத்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், சூலூா் தாலுகாவுக்கு உள்பட்ட இருகூா் பேரூராட்சியின் அனைத்து வாா்டுகளிலும் சாலை, கழிவு நீா் வடிகால் வசதி, பொதுக் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், குடிநீா் இணைப்புக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும், இருகூா் ரயில் நிலையத்தில் காலை, மாலை நேரங்களில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

மாா்க்சிஸ்ட் கட்சியின் இருகூா் கிளைச் செயலாளா் விஜயராகவன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் கட்சியின் சூலூா் தாலுகா செயலாளா் எம்.ஆறுமுகம், தாலுகா குழு உறுப்பினா்கள் ஸ்டாலின் குமாா், சத்துணவு ஊழியா் சங்க மாநில முன்னாள் தலைவா் பழனிசாமி, விஜயராகவன், சண்முகம் உள்பட பலா் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து பேரூராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT