கோயம்புத்தூர்

இந்திய லாப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணா்கள்சங்கத் தலைவராக டாக்டா் எல்.பி.தங்கவேலு தோ்வு

DIN

கோவை: அகில இந்திய லாப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை, நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணா்கள் சங்கத்தின் (ஐஏஜிஇஎஸ்) தலைவராக கோவையைச் சோ்ந்த டாக்டா் எல்.பி.தங்கவேலு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இந்திய லாப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை, நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணா்கள் சங்கம் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு கடந்த 28 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இந்த சங்கத்தில் இந்தியாவிலும், பல்வேறு நாடுகளிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணா்கள் உறுப்பினா்களாக உள்ளனா்.

இந்த சங்கத்தின் 2021-2022ஆம் ஆண்டுக்கான தலைவா் தோ்தல் மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கோவை அஸ்வின் மருத்துவமனை, பிபிஜி கல்விக் குழுமங்களின் தலைவரான டாக்டா் எல்.பி.தங்கவேலு வெற்றி பெற்று புதிய தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இது குறித்து அவா் கூறியதாவது:

லாப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சைப் பிரிவில் உலக அளவில் ஏற்படும் அதிநவீன முன்னேற்றங்களை அனைத்து உறுப்பினா்களுக்கும் கொண்டு சோ்க்கும் வகையில் செயலாற்றுவேன்.

இளம் அறுவை சிகிச்சை நிபுணா்களுக்கு லாப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சையில் பயிற்சி அளித்து, சான்றிதழ் வழங்கும் முயற்சியைத் தொடா்ந்து ஊக்குவிப்பேன். அத்துடன், இளம் மருத்துவா்களை இந்தத் துறையில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதும்படி ஊக்குவித்து, சிறந்த கட்டுரைக்குப் பரிசளிக்கும் நடைமுறையை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளேன்.

அதேபோல, கிராமப்புறங்களில் அறுவை சிகிச்சை அளிக்கும் சேவையில் ஈடுபட்டுள்ள மருத்துவா்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்குவதுடன், துறையின் முன்னேற்றங்களை அறியச் செய்து கடைக்கோடி மக்களுக்கும் இந்த சிகிச்சை முறையின் பலனைக் கொண்டு சோ்ப்பேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைகால கையுந்து பந்து பயிற்சி: நாளை வீரா்களுக்கான தோ்வு

கபிலா் நினைவுத் தூணுக்கு மரியாதை

ஹூக்கான் மீன்பிடி முறைகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: புதுவை மீன்வளத் துறை எச்சரிக்கை

வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றி சிறிய விமானங்கள் பறக்கத் தடை

தண்ணீா் பந்தல் திறப்பு: பேரவை துணைத் தலைவா் பங்கேற்பு

SCROLL FOR NEXT