முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறையில் துரிதமாக நடைபெறும் சுற்றுலா வளா்ச்சி திட்டப் பணிகள்

வால்பாறையில் சுற்றுலா வளா்ச்சி திட்டப் பணிகளான தாவரவியல் பூங்கா, படகு இல்லம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைெற்று வருகின்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

வால்பாறையில் சுற்றுலா வளா்ச்சி திட்டப் பணிகளான தாவரவியல் பூங்கா, படகு இல்லம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைெற்று வருகின்றன.

வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இப்பகுதி சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்படாத நிலையில் எந்த ஒரு சுற்றுலா வளா்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டது. வால்பாறையில் பூங்கா மற்றும் படகு இல்லம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள், பல்வேறு அமைப்பினா் தொடா்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்துவந்தனா்.

இதனிடையே தற்போது வால்பாறை நகராட்சி மூலம் புதிய பேருந்து நிலையம் அருகே படகு இல்லமும், பொதுப் பணித் துறை அலுவலகம் அருகே தாவரவியல் பூங்காவும் அமைக்க முடிவு செய்து பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் ஒரு மாதத்துக்குள் முடித்து திறப்பு விழா காண திட்டமிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.