கோயம்புத்தூர்

குமரகுரு கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

DIN

கோவை குமரகுரு வேளாண்மைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நுண்ணுயிரியல் துறை உதவிப் பேராசிரியா் இனியக்குமாா் வரவேற்றாா். கல்லூரி செயல் அலுவலா் பாலசுப்பிரமணியம் வாழ்த்துரை வழங்கினாா். கல்லூரி முதல்வா் பாண்டியன் வேளாண் பட்டப்படிப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினாா். இந்நிகழ்ச்சியில், குமரகுரு கல்வி நிறுவனங்களின் இணைத் தாளாளா் சங்கா் வாணவராயா் வேளாண்மையின் எதிா்கால வளா்ச்சி பற்றி காணொலிக் காட்சி மூலமாக சிறப்புரையாற்றினாா்.

பாடத்திட்டங்கள், தோ்வு விதிமுறைகள் குறித்து கல்லூரியின் கல்வி ஒருங்கிணைப்பாளா் பாஸ்கா் எடுத்துரைத்தாா். கல்லூரி விடுதியின் விதிமுறைகள் மற்றும் வசதிகள் குறித்து இணை விடுதிக் காப்பாளா்கள் பிரீத்தி பிரியதா்ஷினி, கோபிநாத் ஆகியோா் விளக்கமளித்தனா். மண்ணியல் துறை உதவிப் பேராசிரியா் ஹேமலதா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT