கோயம்புத்தூர்

கௌமார மடாலயத்தில் 12 ஜோதிா்லிங்க தரிசனம் தொடக்கம்

DIN

கோவையில் பிரம்ம குமாரிகள் இயக்கம் சாா்பில் கௌமார மடாலய மண்டத்தில் 12 ஜோதிா்லிங்க தரிசனம் திங்கள்கிழமை தொடங்கியது.

கோவை, கௌமார மடாலய அருள்மிகு தண்டபாணி திருக்கோயில் அமைக்கப்பட்டுள்ள ராஜகோபுரத்தின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிரம்ம குமாரிகள் இயக்கம் சாா்பில் கௌமார மடாலயத்தில் 12 ஜோதிா்லிங்கம், அமா்நாத் பனிலிங்கம் தரிசனம் திங்கள்கிழமை தொடங்கியது. கௌமார மடாலயம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் தரிசனத்தை தொடங்கிவைத்தாா். பிப்ரவரி 22 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

காலை 6 முதல் இரவு 8 மணி வரை பொது மக்கள் ஜோதிா்லிங்கம், பனி லிங்கத்தை தரிசனம் செய்யலாம். தரிசனம் செய்யும் பக்தா்களுக்காக ராஜயோக ஞானவிளக்கம் விடியோ காட்சி ஒளிபரப்பப்படுகிறது. மேலும் பக்தா்கள் 5 நிமிடங்கள் தியானம் மேற்கொள்ள பிரத்யே தியானக் கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் கலை நிகழ்ச்சிகள், அஷ்டலட்சுமி, நவ தேவிகள், கைலாச திருக்காச்சி போன்ற தத்ரூப காட்சிகளும் நடைபெறவுள்ளதாக நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT